நைஜரில் இருந்து பிரஜைகளை வெளியேற்றும் பிரான்ஸ்.
நைஜரிலிருந்து, பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய பிரஜைகளை வெளியேற்றும் நடவடிக்கைகளை பிரான்ஸ் ஆரம்பித்துள்ளது.
நைஜரில் கடந்த வாரம் பெற்ற இராணுவப் புரட்சியையடுத்து இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பிரெஞ்சு, ஐரோப்பிய பிரஜைகளை நைஜரிலிருந்து வெளியேற்றுவற்கு 3 விமானப் பயணங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன் முதல் விமானப் பயணம் நேற்று முன்தினம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எயார்பஸ் ஏ330 ரக விமானத்தின் மூலம் 272 பேர் பயணித்தனர் எனவும் இவர்கள் பாரிஸ் நகரை வந்தடைவர் எனவும் பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் கெத்தரின் கொலோனா நேற்று தெரிவித்துள்ளார்.
நைகர் ஜனாதிபதி மொஹ்மத் பஸோம், கடந்த வாரம் அவரின் பாதுகாப்புப் படையினரால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்.
நைகர், பிரான்ஸின் காலனித்துவ நாடாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.