எட்டு தேசிய விருதை வென்ற கிளிநொச்சி கலைஞர்கள் நடித்த மண்குளித்து நாடகம்
எட்டு தேசிய விருதை வென்ற கிளிநொச்சி கலைஞர்கள் நடித்த மண்குளித்து நாடகம் வாழ்த்துகள்
தேசிய அரச நாடக விழா 2020
இலங்கை கலாசார அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், மற்றும் அரச நாடகக் குழு இணைந்து 2020 ஆம் ஆண்டின் 48வது அரச நாடக விழாவினை கடந்த பெப்ரவரி மாதம் நடாத்தியிருந்த்து. இதில்” மண்குளித்து “நாடகம் 26.02.2020 அன்று கொழும்பு எல்பிஸ்டன் திரையரங்கில் போட்டிக்காக அரங்கேறியது.
இந்த போட்டி நிகழ்வு மூன்று சுற்றுக்களாக இடம் பெற்றது. மூன்றாவது சுற்றே இறுதிச் சுற்றாகும்.இவ் வருடம் 32 குறுநாடகப் பிரதிகளும் 20 நெடுநாடக பிரதிகளும் போட்டிக்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்ததாக அறியக் கிடைக்கின்றது.இதில் இறுதிச் சுற்றுக்கு 5குறுநாடகங்களும் 2 நெடுநாடகங்களும் தெரிவாகியிருந்தது.இறுதிச் சுற்றுக்கான போட்டி முடிவுகளுடன் விருது வழங்கல் விழா 11.09.2020 அன்று மாலை 6.00 மணிக்கு கொழும்பு தாமரைத்தடாகம் கலையரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.
அருணாசலம் சத்தியானந்தன் மற்றும் பிரதீப்ராசா அவர்களுடைய
நெறியாள்கையில் “மண்குளித்து” நாடகம் ஆண்டின் மிகச்சிறந்த நெடுநாடகமாகத் தேர்வாகியதுடன்தேசிய அளவில் முதலாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது .இது மட்டுமல்லாமல் நாடகத்துறைசார்ந்த எட்டுப் 8 பிரிவுகளில் 13 தேசிய விருதுகளை வென்று சாதனையை நிலை நாட்டியது.
• சிறந்த தயாரிப்பு
• இயக்கம்
• நாடக நயனம்
• ஒளியமைப்பு
• இசை
• நடிப்பு
• அரங்கமுகாமைத்துவம்
• சிறந்த நாடக எழுத்துருவாக்கம் ஆகியவை கிடைத்த துறைசார் விருதுகளாகும்.பணப்பரிசும் கிடைக்கப்பெற்றது.
இந் நாடகம் கிளிநொச்சி மாவட்டத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி 50க்கும் மேற்பட்ட கலைஞர்களின் பங்குபற்றுதலுடன் நிகழ்த்தப்பட்டிருந்தது
.48 வருட தேசிய நாடக விழா மரபில்
கிளிநொச்சி மாவட்டம் முதற்தடவையாக போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்று சாதித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.கிளிநொச்சி மாவட்டக்கலைஞர்களுடன் ஏனைய மாவட்டங்களைச்சார்ந்த அணிசேர் கலைஞர் ,, பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக மட்ட நாடக செயற்பாட்டாளர்களின் இணைவில் பிரமாண்டப் படைப்பாக உருவாகியிருந்தது.மண்குளித்து நாடகம்.
குறுநாடக போட்டிப் பிரிவிலும் இந் நாடகக் குழுவினைச் சேர்ந்த ஸ்ரீகாந் அவர்களின் நெறியாள்கையில் உருவாகிய “அங்கீகாரம் ” நாடகம் ஆண்டின் சிறந்த தயாரிப்பாக முதலாமிடம் பெற்றதுடன்
சிறந்த இயக்குனர் ,தயாரிப்பு, மேடையமைப்பு, பிரதி,நடிப்பு, ஒளியமைப்பு பிரிவுகளில் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கதாகும்.