வவுனியா கொலை வழக்கு பிரதானசந்தேக நபர்கரை 11ம்திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.
வவுனியாவை அதிரவைத்த இரட்டை கொலை வழக்கு பிரதானசந்தேக நபர்கரை 11ம்திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு: அனுராதபுரம் சிறைச்சாலைக்கு அனுப்பி வைப்பு.
வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் தம்பதிகள் மரணம் சம்பவம் தொடர்பில் ஜந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என சந்தேகிக்கும் நபரை வவுனியா நகரில் குற்றபுலனாய்வு திணைக்களத்தின் கொலைவிசாரனை பிரிவினரால் கைது செய்யப்பட்டு குறித்த வாக்குமூலங்கள் பெறப்பட்டு இன்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்தியுள்ளனர் பிரதான சந்தேகநபரை எதிர்வரும் 11 திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை இன்று (04.08.2023) வவுனியா சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்படுதிய பின்னர வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் குற்ற புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரணை பிரிவினர் ஆஜர்படுத்தினர்.
இதன்போதே சந்தேக நபரை எதிர்வரும் 11 வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்க வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் அகமட் ரசீம் உத்தரவிடார்.