மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன் பலி! – மனைவி படுகாயம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன் சாவடைந்துள்ளதுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் அம்பாந்தோட்டை, சூரியவெவை பிரதேசத்தில் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளது.
உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய தம்பதியினரே விபத்தில் சிக்கியுள்ளனர்.
அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியோரத்தில் நின்ற மரத்துடன் மோதியதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 52 வயதுடைய கணவன் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார்.
48 வயதுடைய மனைவி படுகாயங்களுடன் சூரியவெவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.