குழு மோதலில் இளம் குடும்பஸ்தர் அடித்துப் படுகொலை!

இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கொழும்பு – பாதுக்கை பிரதேசத்தில் இன்று (04) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
29 வயதுடைய எச்.எம்.முஷாரப் என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் தொடர்பில் நால்வரைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.