கட்டமைக்கப்பட்ட பௌத்த மயமாக்கலை உடன் நிறுத்து! – யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுழிபுரத்தில் போராட்டம் இடம்பெற்றது.
போராட்டத்தைத் தொடர்ந்து சுழிபுரம் சந்தியில் இருந்து பாறளை முருகன் ஆலயத்தை நோக்கிப் பேரணி பயணித்தது
யாழ்ப்பாணம் – சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை நாட்டிய மரம் என வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி மீளப்பெறப்பட வேண்டும் எனத் தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தின் போது தொல்லியல் திணைக்களத்துக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் பதாகைகளையும் போராட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.
இந்தப் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், மத குருமார்கள், சைவ அமைப்புக்களின் உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.