வவுனியா கடவுச்சீட்டு அலுவலக தமிழ் மாபியா கும்பலின் லஞ்சத்திற்கு அடிமைகளாக அரச ஊழியர்கள்?
வவுனியா பாஸ்போட் கடவுச்சீட்டு அலுவலகத்தில் என்னதான் நடக்குது இங்கே தலைவிரித்தாடும் தமிழ் மாபியா கும்பலின் லஞ்சத்திற்கு அடிமைகளாக அரச ஊழியர்கள் வடகிழக்கு பிரதேசங்களில் இருந்து பல சொல்லமுடியாத துன்பங்களுடன் பாஸ்போட் அலுவலகம் இயங்கி வருகின்றது.
அதாவது வவுனியாவில் இருக்கும் கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு கடவுச்சீட்டு எடுக்கவரும் அப்பாவி தமிழ் ஏழை பொதுமக்களிடம் பாஸ்போட் எடுக்கும் விதிமுறைகளை தாண்டி பல ஆயிரம் ரூபாய்களை வருபவர்களிடம் லஞ்சமாக வாங்கி கடவுச்சீட்டை பெற்றுக்கொடுக்கும் தமிழ் மாபியா கும்பலுக்கும் அதே அலுவலகத்தில் பணிபுரியும் அரச ஊழியர்களும் நெருங்கிய தொடர்புகள் உள்ளதாக பாஸ்போட் கடவுச்சீட்டை பெற்று வீடு திரும்பிய பலர் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.
கண்ணீர் கதைகளாக ஒவ்வொன்றாக அங்கே நடக்கும் அநியாயங்களை விபரிக்கிறார்கள் இவைகளை கேட்கும்போது வவுனியா பாஸ்போட் கடவுசீட்டு அலுவலகம் நரகல் குழியா என்று எண்ணணத் தோன்றுகிறது இதுதானா சிங்கள ஆட்சியாளர்களின் சீத்துவம் அல்லது தமிழர்கள்தானே எப்படிப் போனால்லென்ன என்ற மனப்போக்கா இதை தடுக்கமுடியாதா இதை தடுத்து நிறுத்த சிங்கள காவல்துறைக்கோ அல்லது சிங்கள அரசின் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கோ முடியாதா இதை தடுக்காவிட்டால் இந்த அநியாயயத்திற்கு எதிராக வடகிழக்கு மக்கள் கொதித் எழுவார்கள்.
அத்தோடு அங்கு பணிபுரிகின்ற பாதுகாப்பு ஊழியர்கள் உட்பட ஒவ்வொரு அலுவலர்களையும் விசாரணை செய்து பார்த்தால் இப்பிரச்சனைக்கு உட்பட்டவர்களாக தான் காணப்படுவார்கள்.
மேலும் அலுவலகத்திற்கு வெளியில் இயங்குகின்ற விண்ணப்படிவங்கள் பூர்த்தியாக்குகின்ற கடைகளில்தான் மிகப்பெரிய தொகையினை மக்களிடம் இருந்து இலஞ்சமாக பெறப்படுகின்றது.