கிணற்றில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் மரணம்!

கிணற்றில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்தில் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுவன் தாயாருடன் குளித்துக் கொண்டிருந்தபோதே கிணற்றில் தவறி விழுந்து சாவடைந்துள்ளார்.
அருணாசலம் சிவரூபன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.