உறவினர்களுக்கிடையில் மோதல்: பாடசாலை மாணவன் கத்தியால் வெட்டிப் படுகொலை!

உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் பாடசாலை மாணவன் ஒருவர் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொடூர சம்பவம் குருநாகல், பண்டவஸ்நுவரை மேற்கு பிரதேசத்தில் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த மாணவனின் வீட்டுக்கு முன்னால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவன், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார்.
பண்டவஸ்நுவரை பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் ஆர்.டி.அனுரப்பிரியதர்ஷன (வயது 18) என்ற மாணவனே சாவடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் 7 பேரைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.