30 ஆயிரத்து 54 கைதிகள் இலங்கைச் சிறைகளில்!
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
சிறைச்சாலை திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், கடந்த 9 ஆம் திகதி நிலவரப்படி 30 ஆயிரத்து 54 கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறைகளில் 11 ஆயிரம் கைதிகள் மட்டுமே இருக்க முடியும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
28 ஆயிரத்து 469 ஆண் கைதிகளும், ஆயிரத்து 585 பெண் கைதிகளும் தற்போது சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்த ஆயிரத்து 404 கைதிகளும், வெளிநாட்டு கைதிகள் 195 பேரும் உள்ளனர். தண்டனை பெற்ற தங்களது தாய்மாருடன் 43 குழந்தைகள் சிறைகளில் உள்ளனர்.