இத்தாலி அருகே படகு கவிழ்ந்து 41 அகதிகள் பலி.

உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் மத்திய தரைக்கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைய முற்படுகின்றனர். இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் பல நேரங்களில் துயரத்தில் முடிந்து விடுகிறது. அளவுக்கு அதிகமான பயணிகளுடன் செல்லும் படகுகள் கவிழ்ந்து ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இத்தாலியின் லம்பேடுசா தீவின் அருகே 45 பேருடன் சென்ற படகு மூழ்கியதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். துனிசியாவில் உள்ள ஸ்பாக்ஸில் இருந்து புறப்பட்ட படகு, இத்தாலி நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென விபத்துக்குள்ளாகி மூழ்கியதாக, இந்த விபத்தில் இருந்து தப்பிய 4 பேரும் தகவல் தெரிவித்துள்ளனர்.