தீ விபத்தில் இளம் ஜோடி பரிதாப மரணம்!

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இளம் தம்பதியினர் சாவடைந்துள்ளனர்.
இந்தப் பரிதாப சம்பவம் கம்பஹா – அத்தனகல்ல பிரதேசத்தில் நேற்று (10) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மினுவாங்கொடைப் பிரதேசத்தைச் சேர்ந்த 29, 27 வயதுடைய தம்பதியினரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
அத்தனகல்ல பிரதேசத்தில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் இருவரும் அந்தப் பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்த வேளையிலேயே தீ விபத்தில் சிக்கியுள்ளனர். மனைவி சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார். கடும் தீக்காயங்களுடன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட கணவன் அங்கு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் இன்னமும் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.