திருமலையில் பாடசாலை மாணவர்களுக்கான விவாதம்.

திருகோணமலை கீரோஸ் லியோ கழகத்தின் ஏற்பாட்டில் சொற்சிலம்பம் 2023 விவாதப் போட்டி எதிர்வரும் 13.08.2023 அன்று காலை 8.00 மணி முதல் திருகோணமலை புனித சவேரியார் மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது. பாடசாலைகளுக்கிடையிலான இப்போட்டியில் மலையகம், அரசியல், கல்வி, பண்பாடு தொடர்பிலான தலைப்புக்களுடன் விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.