குடாநாட்டில் நிலவும் அதிக வெப்பத்தால் வயோதிபர் பரிதாப மரணம்!

யாழ். குடாநாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி, வல்வெட்டித்துறைப் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் ஞானமூர்த்தி (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வீட்டின் குளியலறையில் மயங்கிய நிலையில் காணப்பட்ட நபரை வீட்டார் மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்த்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
அதிக வெப்பம் காரணமாக குருதி ஓட்டக் குறைவால் மரணம் சம்பவித்துள்ளது எனப் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.