மதுரை எய்ம்ஸ் தாமதம் தமிழ்நாடு அரசே காரணம் – நிர்மலா சீதாராமன்
மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் பேசும் மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டிடையும், திமுகவையும் தாக்கி பேசி வருகின்றர். தீர்மானத்தின் மீது புதன் கிழமை பேசிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தமிழ்நாட்டை ஆளும் திமுக, வட இந்தியாவை மட்டுமே இந்தியா என கூறுவதாக குற்றம்சாட்டினார்.
இதேப்போல் வியாழக்கிழமை விவாதத்தில் பங்கேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திமுக உறுப்பினர் டி.ஆர். பாலு , மதுரை எய்ம்ஸ்க்கு மருத்துவமனைக்கு ஜப்பான் நாட்டிடம் கடன் வாங்க உள்ளதாக குற்றம்சாட்டியதை குறிப்பிட்டார்.மேலும், மற்ற மாநிலங்களில் உள்ள எய்ம்ஸ்-களை விட, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் கூடுதல் படுக்கைகள் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
அப்போது மருத்துவமனை எப்போது வரும் என்ற கேள்வியை எழுப்பி திமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.பின்னர் அமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என கூறி எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்ய முற்பட்டனர்.
அப்போது, பேசிய நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு குறித்து தனக்கு பேச நிறைய தரவுகள் இருப்பதாக தெரிவித்தார். மருத்துவமனை கட்டடுவதில் தாமதம் ஏற்பட்டதற்கு மாநில அரசே காரணம் எனவும் நிர்மலா சீதாராமன் ஆவேசமாக கூறினார் தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், செங்கோல் குறித்து திமுக எம்பி பேசியதை குறிப்பிட்டு, நேருவிடம் கொடுத்த முதல் செங்கோல் கைத்தடியாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.
மேலும் சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை திமுகவினர் அவமானப்படுத்தியதாக சாடினார். இதனை அவை குறிப்பில் இருந்து இதனை நீக்க வேண்டும் என திமுக எம்பி கதிர் ஆனந்த் கோரிக்கை விடுத்தார்.