தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் தான் ஜனகராஜ்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் தான் ஜனகராஜ். இவர் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினர்.
ஜனகராஜ் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் முதல் முதலாக பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கு போகும் ரயில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்..
நகைச்சுவை நடிகர்களான கவுண்டமணி செந்தில் ஜோடிக்கு பெரும் போட்டியாக இருந்தார். அந்த நேரத்தில் எதிர்பாராமல் அவரது முகம் விபத்துக்குள்ளாகி
பாதிக்கப்பட்டது. இதை பார்த்து பலரும் ” இந்த மூஞ்சியை வச்சிட்டு எப்புடி இனிமே படங்களில் நடிப்பார்கள் என கிண்டலடித்தனர்
அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து முயற்சித்து திரைப்படங்களில் நடித்த அவர் கொஞ்சம் இழுத்து.. இழுத்து பேசி தனக்கென ஒரு தனி மாடுலேஷனையும், பாடி லாங்குவேஜையும் வரவைத்துக்கொண்டார். அதற்கு இன்னும் வரவேற்புகள் அதிகமாக கிடைத்தது. இதனால் கேப் இல்லாமல் நடிக்கும் அளவிற்கு படவாய்ப்புகள் குவிந்தது.
இருந்தாலும் அவ்வப்போது அதை நினைத்து வருந்தவாரம். சில வருடங்களில் அவரால் நடிக்க முடியாமல் போனது…இதை கவனித்த இயக்குனர் பாரதிராஜா அவரை பார்த்துக்கொள்ள தனது உதவி இயக்குனர் ஒருவரை அனுப்பினார்.அவர் ஸ்க்ரிப்ட் மற்றும் ஷூட்டிங்கில் வேலை செய்ததை விட கனகராஜுக்கு உதவி செய்தது தான் அதிகமாம். அந்த உதவி இயக்குனர் வேறு யாரும் அல்ல நடிகர் மனோபாலா தான்.
வயது முதிர்ச்சி அடைய அவரால் நோயில் இருந்து மீள முடியாமல் தவித்துள்ளார்
இப்போது குணம் அடைந்து விட்டார்.
2008 ஆம் ஆண்டுக்கு பிறகு 10 ஆண்டுகள் தன்னுடைய குடும்பம் குழந்தைகளுடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். ஜனகராஜ்.
நடிகர் விஜய் சேதுபதியின் வேண்டுகோளுக்கிணங்க ஜனகராஜ் 96 திரைப்படத்தில் நடித்துக் கொடுத்துவிட்டு உடனடியாக அமெரிக்காவுக்கு கிளம்பி சென்று விட்டார். தற்பொழுது தன்னுடைய குடும்பம் குழந்தைகளுடன். அமெரிக்காவில் வசித்து வருகிறார்.