பாராளுமன்றத்து பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் பணி இடைநீக்கம்.
நேற்று முன்தினம் (11) பாராளுமன்றத்தின் பராமரிப்பு திணைக்களத்தின் சில இளம் அழகான பெண் ஊழியர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் நாடாளுமன்ற உதவியாளர் , விசாரணைகளின் பின் , பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி குஷானி ரொஹந்திரவினால் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
பாராளுமன்றத்தின் ஹவுஸ் கீப்பிங் திணைக்களத்தில் சில இளம் அழகான பணிப்பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்தார்.
இந்த குழு நியமிக்கப்பட்ட பிறகு, குழுவின் முன் தானாக முன்வந்து ஊழியர்கள் குழு ஆஜராகி, தங்களுக்கு நடந்த முறைகேடுகள் குறித்து பல விவரங்களை வெளிப்படுத்தினர். பணிப்பெண்கள் கொடுத்த தகவலைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்ற உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மேலும் பல அதிகாரிகள் பற்றிய தகவல்களை ஊழியர்கள் வெளிப்படுத்தியுள்ளதாகவும், எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக சாட்சியமளிப்பதை தடுக்கும் வகையில் பணிப்பெண்களை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் குழுவொன்று பல்வேறு வழிகளில் அச்சுறுத்திய சம்பவங்கள் தொடர்பிலும் நாடாளுமன்ற தலைவர்களுக்கு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக பாராளுமன்ற தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.