பாரிசில் பரபரப்பு – ஈபிள் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அமைந்துள்ளது ஈபிள் டவர். உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.
கடந்த 1889-ஆம் ஆண்டு ஈபிள் டவர் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. உலகில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக ஈபிள் டவர் உள்ளது. இந்நிலையில், ஈபிள் டவரில் வெடிகுண்டு இருப்பதாக இன்று மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து ஈபிள் டவர் மூடப்பட்டது. வெடிகுண்டு சோதனை தீவிரமாக நடத்தப்பட்ட பிறகு, அந்த மிரட்டல் போலியானது என தெரிய வந்தது.
2 மணி நேரம் கழித்து எச்சரிக்கை நீக்கப்பட்டு மீண்டும் ஈபிள் டவர் சுற்றுலா பயணிகளுக்காகத் திறக்கப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பரில் ஈபிள் டவரில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.