யாழ். தென்மராட்சியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், தென்மாராட்சி, மட்டுவில் கிழக்கில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நெல்லியடி தபாலகத்தில் பணிபுரியும் 36 வயதான நபரே நேற்று (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் தவறான முடிவு எடுத்து உயிர்மாய்த்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.