தமிழ் திரையுலகில் பன்முக திறமை கொண்ட இயக்குனர் T.ராஜேந்தர்.
தமிழ் திரையுலகில் பன்முக திறமை கொண்ட இயக்குனர், சிறந்த பேச்சாளர், நல்ல நடிகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அரசியல் கட்சி தலைவர்… இப்படி பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் நம்ம டி.ராஜேந்தர் அவர்கள்!!
அவர் இயக்கிய படங்களில் ஒரு தலை காதல், தங்கை பாசம், குடும்ப பாசம், காதல் தோல்வி போன்ற கதையம்சம் கொண்ட படங்கள் தான் அதிகம். சென்டிமென்ட் காட்சிகள் அதிகம் இருக்கும்.
என்பதுகளில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாக்கியராஜ், விசு, பாரதிராஜா, பாலசந்தர், பாலுமகேந்திரா போன்றவர்களுக்கு போட்டியாக இருந்தார். பல துறைகளில் ஆளுமை கொண்ட இயக்குனர்களில் இவருக்கு நிகர் இவர் மட்டுமே இன்றுவரை!!
இவர் படங்கள் ஒரு காலத்தில் சக்க போடு போட்டது. குறிப்பாக என் தங்கை கல்யாணி, ரயில் பயணங்களில், ஒரு தலை ராகம், கிளிஞ்சல்கள், பல வெற்றிப் படங்கள் உண்டு.
அதேபோல் பல சினிமா நட்சத்திரங்களை அறிமுகம் செய்த பெருமையும் இவருக்கு உண்டு. இவர் மகன் மன்மதனாக இருந்தாலும், இதுவரை எந்த கெட்ட பழக்கமும் எந்த கெட்ட பெயரும் சம்பாதிக்காத நல்ல மனிதர் இவர்!!
தாஜ்மகாலை கட்டியது ஷாஜகானாக இருந்தாலும் மும்தாஜை அறிமுகம் செய்தது நம்ம டி.ஆர் தான்.
இவரது மகன் சிலம்பரசன் பல கிசுகிசுக்கப்பட்டாலும் இவரின் எப்போதும் உயிர் உள்ள வரை உழா மட்டுமே!
இன்று வரை துண்டு பிரசுரங்கள் இல்லாமல் அழகான தமிழில் எதுகை மோனையுடன் பேசும் ஒரே இயக்குனரும் மனிதரும் இவர் மட்டுமே!
ஆக மொத்தம் தமிழனுக்கு ஒரு ஆபத்து வந்தாலும் சரி, தமிழ் படங்களுக்கு பிரச்சினை வந்தாலும் சரி, முதல் குரல் கொடுப்பது நம்ம வீராசாமி டி.ராஜேந்தர் சார் தான்!