மரம் விழுந்து , தெஹிவளை மிருகக்காட்சி சாலையின் பிரதான பாதுகாப்பு அதிகாரி பரிதாபச் சாவு!

தெஹிவளை மிருகக்காட்சி சாலையின் பிரதான பாதுகாப்பு அதிகாரி பரிதாபகரமாகச் சாவடைந்துள்ளார்.
மரம் ஒன்று வேரோடு சாய்ந்து மின் கேபிள் கம்பத்தில் மோதி அவர் மீது விழுந்ததால் அவர் உயிரிழந்துள்ளார்.
54 வயதுடைய செனரத் மாரகந்த என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (15) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ளான அவர் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும், அவர் மாலை 5:30 மணியளவில் இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.