மகனை கத்தியால் வெட்டிக் கொலை செய்த தந்தை!

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து மகனைத் தந்தை கத்தியால் வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் நீர்கொழும்பில் உள்ள வீடொன்றில் நேற்று (16) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த மகன், நீர்கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பைச் சேர்ந்த 21 வயதுடைய எஸ்.ஆர்.விமலவீர என்ற இளைஞரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் 46 வயதுடைய தந்தையைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.