யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் வயோதிபரின் சடலம் மீட்பு!

வயோதிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்., தென்மராட்சி, கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் பகுதியில் நேற்று (17) பிற்பகல் 70 வயதான வயோதிபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டின் பின்புறமாக நின்ற மாமரத்தில் தூக்கிட்ட நிலையில் அவர் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் மீட்கப்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மரணம் குறித்த மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.