பராமரிக்க ஆற்றல் இல்லை என 7 பச்சிளம் குழந்தைகளைக் கொன்ற பிரிட்டிஷ் தாதி
ஒரு தாதி 7 பச்சிளம் குழந்தைகளைக் கொன்றதாகப் பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் உறுதியாகி , தீர்ப்பளிக்கப்பட உள்ளது.
33 வயது லூசி லேட்பி என்ற பெண் 2015ஆம் ஆண்டுக்கும் 2016ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இக் கொலைகளைப் புரிந்துள்ளார்.
அவர் Countess of Chester மருத்துவமனையில் உடல்நலம் இல்லாத குழந்தைகளையும் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளையும் பராமரிக்கும் பிரிவில் வேலைசெய்தார்.
லேட்பி, ஊசியில் இன்சுலினையோ (insulin) காற்றையோ நிரப்பி அதைச் சில குழந்தைகளுக்குச் செலுத்தியதாகக் கூறப்பட்டது.
அவர் சில குழநதைகளுக்கு பலவந்தமாகப் பாலூட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்பி மேலும் 6 குழந்தைகளை அவ்வாறு கொல்ல முயன்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரணமில்லாமல் மரணங்கள் நேர்ந்தபோது மருத்துவர்கள் கவலையடைந்து, காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
அதன் பின் அதிகாரிகள் லேட்பியின் வீட்டைச் சோதனைசெய்த போது , அவரது வீட்டிலிருந்து ஒரு குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
“அவர்களைக் கவனிக்கும் அளவிற்கு என்னிடம் ஆற்றல் இல்லை என்பதால் அவர்களைக் கொலை செய்தேன்,”
“நான் தீங்கு விளைவிப்பவள்,”
என்று அதில் எழுதப்பட்டிருந்தது.
லேட்பியின் வாழ்க்கையில் வழக்கத்துக்கு மாறாக எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை;
அவர் கொலையைப் புரிந்ததற்கு உள்நோக்கம் ஏதும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
அவருக்கு நாளை மறுநாள் (21 ஆகஸ்ட்) தண்டனை விதிக்கப்படும்.
லேட்பிக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.