யாழ். வடமராட்சி கிழக்கில் 130 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – முள்ளியான் கடற்பரப்பில் வைத்து இன்று (19) அதிகாலை கேரள கஞ்சாவுடன் ஒருவரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடத்தலுக்குப் பயன்படுத்திய படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
61 பொதிகளில் 130 கிலோகிராம் கேரள கஞ்சா அடைக்கப்பட்ட நிலையில் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
உடுத்துறையைச் சேர்ந்த 44 வயது நபரே கைது செய்யப்பட்டுள்ளார் என்று கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைதான சந்தேகநபர் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவுடன் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன் சந்தேகநபரை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளனர்.