சட்லஜ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு…தவிக்கும் கரையோர கிராம மக்கள்!
பஞ்சாப் மாநிலம் ஹரிகே தடுப்பணையில் இருந்து அதிகளவிலான நீர் திறக்கப்பட்டதை அடுத்து, சட்லஜ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோரங்களில் உள்ள கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம், ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ளது ஹரிகே அணை. இந்த அணைக்கான நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக, அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், அணையில் இருந்து அதிக அளவிலான நீர் சட்லஜ் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால், இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள ஹுசைனிவாலா கிராம மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.
அங்குள்ள வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலையில், உணவு உள்ளைட்ட அத்தியாவசிய உதவி கிடைக்காமல் மக்கள் தவித்தனர். இதனை அடுத்து படகுகளைப் பயன்படுத்தி, அப்பகுதி மக்களை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களும் விநியோகிக்கப்பட்டன.