தமிழகம் முழுவதும் திமுக-வினர் இன்று உண்ணாவிரத போராட்டம்
நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசு மற்றும் தமிழக ஆளுநரை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.
நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி திமுக தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருவதும், தமிழக ஆளுநர் அதற்கு முட்டுக்கட்டை போடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று ஆளுநரை கண்டித்தும் மத்திய அரசுக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்த போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் கலந்து கொள்ள திமுக அழைப்பு விடுத்துள்ளது.
அதேவேளை இன்று மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு நடைபெறுகிறது என்பதால், மதுரையில் மட்டும் 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.