மக்களுக்கு ஆபத்தாகக் காணப்பட்ட வடிகான் மூடிகள் திருத்தம்.

மக்களுக்கு ஆபத்தாகக் காணப்பட்ட வடிகான் மூடிகள் திருத்தம்

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாவடிச்சேனைப் பிரதேசத்தில் சேதமடைந்து காணப்படும் வடிகான்களின் மூடிகளைத் திருத்தும் பணிகளை கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி மேற்கொண்டு வருகிறார்.

இதன் தொடரில், மாவடிச்சேனை ஜூம்ஆப் பள்ளிவாயல் வீதியில் சேதமடைந்து மக்கள் போக்குவரத்துக்கு பெரும் இடைஞ்சலாகவும் ஆபத்தாகவும் காணப்பட்ட வடிகான்களின் மூடிகளை தனியார் வாகனமொன்றின் உதவியுடன் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது, சேதமடைந்து காணப்பட்ட மூடிகளுக்குப் பதிலாக புதிய மூடிகள் இடப்பட்டதுடன், மூடிகள் இல்லாமல் காணப்பட்ட பகுதிகளுக்கும் மூடிகள் இடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனால், இப்பிரதேச மக்கள் பெரிதும் நன்மையடைவதுடன், நாளாந்த தேவைக்கு குறித்த வீதியைப் பயன்படுத்துவோர் பாடசாலை, வங்கி, மின்சார சபை மற்றும் அரச அலுவலகங்கள் வியாபாரஸ்தலங்களுக்கு செல்வோரும் பெரிதும் நன்மையடைவர்.

மக்களின் நன்மை கருதி முன்னெடுக்கப்பட்ட இப்பணிக்கு பிரதேச மக்கள் பிரதேச உறுப்பினருக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.