மூச்சுத் திணறலால் சிறைக் கைதி ஒருவர் உயிரிழப்பு!

காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுவாசக் கோளாறு காரணமாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் நேற்று (20) உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் காலி சிறைச்சாலையின் சந்தேகநபர் 2840 இலக்கமுடைய 32 வயதுடையவர் ஆவார்.
மூச்சுத் திணறல் காரணமாக சிறைச்சாலை அதிகாரிகளால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் கராப்பிட்டிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இறந்தவரின் பிரேத பரிசோதனை காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.