இரத்மலானை ரயில் நிலையத்துக்கு அருகில் ஒருவர் சுட்டுப் படுகொலை!

கொழும்பு, இரத்மலானை ரயில் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் 40 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவர் இரத்மலானை அரலிய வீடமைப்பு பகுதியில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடத்தில் அமைந்துள்ள கோழி இறச்சி விற்கும் கடையில் பணிபுரியும் போதே உயிரிழந்த நபர் சுடப்பட்டுள்ளார்.
சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.