பூட்டப்பட்ட வீட்டில் வீசிய துர்நாற்றம்..கதவை உடைத்தபோது காத்திருந்த அதிர்ச்சி

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் ரயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தானேவின் கல்யாண் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் சுஜித் குமார் (30). இவர் புறநகர் ரயில்வே நெட்வொர்க்கில் லோகோ பைலட்டாக பணியாற்றி வந்தார்.
மேலும் சுஜித் குமார் தனிமையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீடு பூட்டப்பட்டிருந்து. ஆனால் உள்ளே இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியுள்ளது.
எனவே பதறிப்போன அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது சுஜித் குமார் மின்விசிறியில் தூக்கிட்டு சடலமாக தொங்கியுள்ளார்.
அத்துடன் அவரது உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.