மாத்தளை அல்கடுவ தோட்டத்தில் நடந்த அநீதிக்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த எதிர்கட்சி தலைவர் (வீடியோ)
மாத்தளை அல்கடுவ தோட்டத்தில் தோட்ட அத்தியட்சகர் உட்பட 14 பேர் சென்று , 3 குடும்பங்களைச் சேர்ந்த தோட்ட மக்களின் தற்காலிக வீடுகளைக்கூட சேதப்படுத்தியுள்ளதாகவும் இது மிகவும் தவறான செயல் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்க தோட்டமொன்றில் இடம்பெற்ற இந்த கேடுகெட்ட செயலுக்கு அமைச்சர் கூட பொறுப்பேற்க வேண்டும் எனவும் இந்த நாட்டிலுள்ள தோட்ட சமூகத்தின் மீது இந்த அரசாங்கத்தின் கரிசனை இப்போது தெளிவாக தெரிகின்றது எனவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார்.
அமைச்சர் கோழையாக இருக்காமல் இந்த சபைக்கு வந்து பதில் சொல்ல வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.