புதிய வைத்தியர்களுடன் ஒரு அறிமுக கலந்துரையாடல்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார  வைத்தியசாலைக்கு சேவையாற்றுவதற்காக புதிதாக கடமை பொறுப்பை ஏற்க வந்துள்ள புதிய வைத்தியர்களுடன் ஒரு அறிமுக கலந்துரையாடல் ஒன்று வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி வே.கமலநாதன் அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் வைத்தியசாலையின் நடைமுறைகள், பின்பற்றப்படும் நெறிமுறைகள், நோயாளர்களுக்கு வழங்கப்படும் சேவையின் தன்மைகள் போன்ற விடயங்கள் பற்றி இவ் அறிமுக கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டன.

இதில் துறைசார்ந்த வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் கலந்து கொண்டு பல விடயங்களை விளக்கியிருந்தனர்.

வைத்தியசாலை சமுகத்துடன் இன்று இணைந்து கொண்ட இப்புதிய வைத்தியர்களை வைத்தியசாலை சமுகம் சார்பாக நாம் வரவேற்பதுடன் அவர்கள் சிறந்த சேவையை வழங்குவதற்கு எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.