இன்று திட்டமிட்டப்படி நிலவில் தரை இறங்குகிறது சந்திரயான்-3… இஸ்ரோ
இந்தியா மட்டுமல்ல, உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துள்ள நிலையில், சந்திரயான்-3 விண்கலம் இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறக்கப்படுகிறது. நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கைகள் சரியாக சென்று கொண்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி இன்று மாலை 6.04 மணியளவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
நிலவில் தரையிறங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு விக்ரம் லேண்டரின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்படும் என்றும் அதன் அடிப்படையில் சாதமான சூழல் இல்லாவிட்டால் வரும் 27ஆம் தேதி தரையிறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இஸ்ரோவின் அகமதாபாத் மைய இயக்குநர் தேசாய் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி இன்று மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விக்ரம் லேண்டரில் உள்ள தொகுப்புகள் வழக்கமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகவும், நிலவில் லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கைகள் சரியாக சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.