மன்னாரில் இருவர் சுட்டுப் படுகொலை!

மன்னார், பாப்பாமோட்டை – முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸாா் தெரிவித்தனா்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே அவர்கள் உயிரிழந்தனர் என்று பொலிஸாா் மேலும் குறிப்பிட்டனர்.
உயிரிழந்தவர்கள் இருவரும் மன்னார், நொச்சிக்குளம் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சன்னார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.