மின்சார கம்பியில் தேர் மோதுண்டதில் 2 பேர் பலி; 3 பேர் காயம்.

பசறை நமுனுகுல கந்தேஹேன கதிர்காமம் தேர் ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கியதில் உழவு இயந்திரத்தில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில், பூடவத்தை நமுணுகுல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய கணேசன் ரமேஷ், 27 வயதுடைய பன்னீர் செல்வகுமார் ஆகிய இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்து பசறை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
பூட்டாவத்த பகுதியில் குறித்த தேர் அதிவேக மின்சாரத்தை கடத்தும் வடத்தில் மோதுண்டதினால் இவ்விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.