சம்பியனானது செட்டிக்குளம் கலைமகள் அணி.
சம்பியனானது செட்டிக்குளம் கலைமகள் அணி.
வவுனியா மாவட்ட ரீதியாக காந்திநகர் லக்கிஸ்ரார் விளையாட்டுக்கழகம் நடாத்திய அணிக்கு அணிக்கு 09 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்று போட்டியின் இறுதி போட்டியில்
கலைமகள் அணியை எதிர்த்து லயன்ஸ் அணி மோதியது.
ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் எதுவித கோல்களையும் பதிவு செய்யாததால் வெற்றி தோல்வியை தீர்மானிக்க வழங்கப்பட்ட சமநிலை தவிர்ப்பு உதையில் 03:01 என்ற கோல் கணக்கில் கலைமகள் அணி வெற்றி பெற்று சம்பியனானது.
இப்போட்டியின் சிறந்த கோல் காப்பாளராக சங்கீர்த்தன் அவர்களும் வளர்ந்து வரும் வீரராக நிலக்சன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.