மும்மொழியில் அமைந்த திருக்குறள் விழிப்புணர்வுப்பலகை.
யாழ் மாவட்ட கலை கலாசாரப் பேரவையினால் பொதுமக்கள் கூடுகின்ற இடங்களில் காட்சிப்படுத்தும் நோக்கில் மும்மொழியில் அமைந்த திருக்குறள் விழிப்புணர்வுப்பலகை 6×4=24 சதுர அடி அளவில் சுவரில் பொருத்துவதற்கேற்ற முறையில் உருவாக்கப்பட்டு யாழ்ப்பாண பிரதேச செயலகர் பிரிவிற்குட்பட்ட பண்ணை சுற்றுவட்டத்திலுள்ள கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தின் முன்புறச் சுவரில் பொருத்தப்பட்டுள்ளது.