சந்திரயான்-3 விண்கல Pragyan நிலவூர்தி , நிலாவின் மேற்பரப்பில் உலா வருகிறது
இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்தில் சென்ற Pragyan நிலவூர்தி சந்திரனின் மேற்பரப்பை வலம் வந்துகொண்டிருக்கிறது.
நிலவின் பாறைகளையும் பள்ளங்களையும் சுற்றிவரும் நிலவூர்தி அங்கே உள்ள கனிமங்கள், ரசாயனங்கள் முதலியவற்றை ஆராய்கிறது.
இதுவரை யாரும் சென்றடையாத அந்தப் பகுதியில் குறிப்பிடத்தக்க அறிவியல் வளங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
ISRO எனும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் 2 நாள்களுக்கு முன் அதன் விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் இறக்கியது.
அங்குத் திரட்டப்படும் தகவல்களுக்கு அதிக மதிப்புள்ளதாகக் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.
நிலவில் உறைந்திருக்கும் பனிக்கட்டி உயிர்வாயுவைத் தரும் ஆற்றல் கொண்டது. குடிநீரையும் அது வழங்கக்கூடும்.
நிலவின் தென் துருவத்தில் சூரிய ஒளி தெரிவது குறைவு. அதனால் கூடுதல் அறிவியல் தரவுகளைத் திரட்டும் வாய்ப்பிருப்பதாக ISRO கூறுகிறது.
இருப்பினும் சந்திரனில் உள்ள துகள்கள் நிலவூர்தியில் ஒட்டிக்கொண்டால் அதன் இயக்கம் தடைபடும் சாத்தியமிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.