இனவாதப் பிரசாரச் சூழ்ச்சியால் ஆட்சியைப் பிடிக்க மக்கள் ஒருபோதும் அனுமதியார்! – அடித்துக் கூறுகின்றார் ரணில்.

இனவாதப் பிரசாரச் சூழ்ச்சியால் ஆட்சியைப் பிடிக்க நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டார்கள் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இனவாதக் கருத்துக்களைக் கக்கி ஆட்சிப்பீடம் ஏற எத்தனிப்பவர்கள் கடந்த கால வரலாறுகளை மறக்கக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆட்சியை எந்தத் தரப்புக்கு வழங்குவதென நாட்டு மக்களே முடிவு செய்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டு மக்களை எவரும் முட்டாள்களாக்க முடியாது என்றும், அவர்கள் ஜனநாயகவாதிகளையும், இனவாதிகளையும் அடையாளம் கண்டுவிட்டார்கள் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.