சட்டமன்றத்திற்குள் நுழைந்து விவசாயிகள் போராட்டம்…!

மகாராஷ்டிராவில் கையகப்படுத்திய நிலத்திற்கு உரிய இழப்பீடு கோரி விவசாயிகள் சட்டமன்றத்திற்குள் நுழைந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வர்தா பகுதிவை சேர்ந்த விவசாயிகள் நிலம் கையகப்படுத்தியற்கு உரிய இழப்பீடு தரக்கோரி, கடந்த 103 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கு அரசு செவி சாய்க்காத நிலையில், அம்மாநில சட்டமன்றத்திற்குள் நுழைந்த விவசாயிகள், முதல் தளத்தில் இருந்து கீழே குதித்தனர்.
ஆனால், நல்வாய்ப்பாக பாதுகாப்பு வலையில் விவசாயிகள் விழுந்தனர். பாதுகாப்பு வலையில் அந்தரத்தில் தொங்கிய விவசாயிகளை காவலர்கள் மீட்டு சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாநில அமைச்சர் தாதஜி போசே விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இந்நிலையில், 15 நாட்களுக்குள் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உறுதி அளித்துள்ளார்.