யாழ் மாவட்டத்தில் பணிபுரிந்த காலங்கள் பொற்காலம் – வேதநாயகன்
கிளிநொச்சி, முல்லைதீவு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அரசாங்க அதிபராக கடையாற்றிய போதும் யாழ்பாணத்திலேயே எதுவித அழுத்தங்களும் இன்றி பணியாற்ற முடிந்ததாக ஓய்வுநிலை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
யாழ் மாவட்டத்தில் நான்கு வருடங்கள் பதினொரு மாதங்கள் அரசாங்க அதிபராக கடமையாற்றியுள்ளேன். யாழ் மாவட்டத்தில் அரசாங்க அதிபராக கடமையாற்றிய காலம் பொற்காலம் என கூறலாம்.
யாழ் மாவட்டத்தில் கடமையாற்றியபோது எதுவிதமான அழுத்தங்களோ, அரசியல் தலையீடுகளோ காணப்படவில்லை. மாகாண சபைகளின் தினைக்களங்களும் எங்களுக்கு போதிய ஒத்துழைப்பை வழங்கின.
அபிவிருத்திக்கு தேவையான நிதியை தேவையான அளவில் தேவையான நேரத்தில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.
யாழ் மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 12 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உதவி அரசாங்க அதிபராகவோ, பிரதேச செயலாளராகவோ, பதில் கடமையாகவோ கடமையாற்றியிருக்கிறேன்.
இதனால் யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றுவது எனக்கு எந்தவித சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை – என்றார்.