திலீபனின் நினைவேந்தல் தடைக்கு எதிராக மேன்முறையீடு- மணி

நாளைய தினம் நடைபெறவிருந்த தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு யாழ் நீதவான் நீதிமன்று தடை வித்துள்ளது. இது தொடர்பாக மேன்முறையீடு செய்வதற்கான நடவடிக்களை மேற்கொள்ளவுள்ளதாக சட்டத்தரனி மணிவண்ணன் தெரிவித்தார்.

தியாகி திலீபனின் நினைவேந்தலை தடைசெய்யக்கோரி யாழ்ப்பாணப் பொலிஸாரால் நீதிமன்றில் இன்று வழக்கு தொடரப்பட்டு. நீதிமன்றமும் தடைவிதித்தது. இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நாளைய தினம் யாழில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தியாகி திலீபனின் நினைவேந்தல்களை தடைசெய்யக்கோரி யாழ்ப்பாணப் பொலிஸாரால் யாழ் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. இவ் வழக்கில் நான் உட்பட 20 பேர் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர். பிரதிவாதிகள் எவருக்கும் இவ் வழக்கு தொடரபான அறிவித்தல் விடுக்கப்படவில்லை.

இவ் வழக்கில் நானும் சட்டத்தரனி சுகாஷ் கனகரட்ணமும் ஆஜராகினோம். பொலிஸாரின் விண்ணப்பத்தை நிராகரித்து நாளை நினைவேந்தல்களை நடாத்த அனுமதி தருமாறு நாங்கள் விண்ணப்பித்திருந்தோம்.

பொலிஸாரின் விண்ணப்பத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகிய விடுதலைப் புலிகளை நினைவுகூறுதல், கொரோனா பரவுவதற்கு இவ் நினைவேந்தல் இடமளிக்கும், புலிகளின் புத்துருவாக்கம் போன்ற பல்வேறு காரணங்களை கூறி நினைவேந்தலுக்கு தடை கோரப்பட்டது.

எனினும் நாங்கள் அந்த விடையங்கள் அனைத்தையும் முற்றாக நிராகரித்திருந்தோம். தியாகி திலீபன் அகிம்சை வழியில் உண்ணாவிரமிருந்து உயிர்நீர்த்தவர். அவர் உண்ணாவிரதம் இருந்த காலப்பகுதியில் இந்திய இலங்கை ஒப்பந்தம் இடம்பெற்று சமாதான காலம் நிலவியது. அப்போது விடுதலைப் புலிகள் அமைப்பு தடைசெய்யப்படவில்லை. அதனால் திலீபன் தடைசெய்யப்பட்ட நபர் அல்ல என்பதனையும் மன்றில் சுட்டிக்காட்டினோம்.

கடந்த காலங்களில் நினைவேந்தலை தடைசெய்யுமாறு பொலிஸார் கோரிய போதும் நீதிமன்று அத்தடைக்க்கு மறுப்பு தெரிவித்து நினைவேந்தலை சுமூகமாக நடாத்த அனுமதி கொடுக்கப்பட்டதையும், தியாகி திலீபனின் நினைவிடத்தை புணரமைக்க அமைச்சரவை ஒப்புதலோடு நிதி ஒதுக்கப்ளட்டதையும் சபையில் சுட்டிக்காட்டியிருந்தோம்.

மேலும் இறந்த ஒருவரை நினைவுகூறுவது பயங்கரவாத மீளூருவாக்கம் அல்ல என்பதனையும், இவ் நினைவேந்தல் சுகாதார விதிமுறைகளை பின்பற்றியே இடம்பெறும் என்ற உத்தரவாதத்தையும் நீதிமன்றிற்கு வழங்கியிருந்தோம்.

எனினும் துரதிஷ்டவசமாக எங்களுடைய விவாதங்கள் நிராகரிக்கப்பட்டு பொலிஸாரால் கோரப்பட்ட தடை விதிக்கப்பட்டது. தடை விதிக்கப்பட்டமை தொடர்பில் ஏனைய பிரதிவாதிகளுக்கும் தெரிவிக்குமாறு மன்றில் அறிவுறுத்தப்பட்டது.

இத் தடைக்கு எதிராக மேன்முறையீடு செய்வதென தனிப்பட்ட ரீதியில் தீர்மானித்திருக்கிறேன். தடைக்கு எதிராக எவ்வளவு விரைவாக மேன்முறையீடு அல்லது மீளாய்வு செய்யமுடியுமோ அவ்வாறு விரைவாக மேற்கொள்ளவுள்ளேன், என்றார்.

Leave A Reply

Your email address will not be published.