ஆசிய கோப்பை: இலங்கை வங்கதேசத்திற்கு எதிராக வெற்றியை பதிவு செய்தது.
ஆசிய கோப்பை 2023 தொடரின் இரண்டாவது போட்டியில் வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் ஆடியது. வங்காளதேச அணியின் துவக்க வீரர்கள் முகமது நைம் மற்றும் தம்சித் ஹாசன் முறையே 16 ரன்கள் மற்றும் டக் அவுட் ஆகி வெளியேறினர்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ 89 ரன்களை அடித்தார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். இவரை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக வங்காளதேசம் அணி 42.4 ஓவர்களில் வெறும் 164 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
அடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. இலங்கை அணியின் துவக்க வீரர்களான பதும் நிசங்கா மற்றும் திமுத் கருணரத்னே முறையே 14 மற்றும் 1 ரன் எடுத்து அவுட் ஆகினர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் 5 ரன்களுக்கு அவுட் ஆனார். சதீரா சமரவிக்ரமா 54 ரன்களை குவித்தார்.
இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய சரித் அசலங்கா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 62 ரன்களை குவித்தார். இதில் ஐந்து பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். இதன் மூலம் இலங்கை அணி 39 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 165 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.