இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு!

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தூதரகம் இன்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரு தரப்பு பாதுகாப்பு உறவுகளை மீளாய்வு செய்வதற்காக நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்தார்.
இரண்டு தினங்கள் அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.