இந்தியாவில் 74% பேருக்கு ஆரோக்கிய உணவு கிடைக்கவில்லை! அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் உள்ள 74 சதவீதம் பேருக்கு ஆரோக்கியமான உணவுகள் கிடைக்கவில்லை என உலக வங்கி அறிக்கை மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
உலகமே இந்தியாவை உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஒரு புறம் நிலவு மற்றும் சூரியனுக்கு விண்கலம் ஏவப்படுகிறது. மற்றொரு புறத்தில், இந்தியாவில் உள்ள மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை.
இதற்கிடையில், தற்போது உலகில் 5 ஆவது பொருளாதார நாடாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் இந்தியா, விரைவில் 3 ஆவது இடத்திற்கு வரும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இந்நிலையில், உலக வங்கியின் அறிக்கையில் இந்தியாவில் 74 சதவீத மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இந்தியாவில் ஆரோக்கியமான உணவுகளின் விலை அதிகமாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவும், மும்பையில் கடந்த 5 ஆண்டுகளில் 28 முதல் 37 சதவீதம் வரை ஊதியம் உயர்ந்த நிலையில், உணவுப் பொருட்களின்விலை 65 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஒரு நாடு வளர்ச்சியடைகிறது என்றால் அங்குள்ள மக்களும் வளர்ச்சி அடைகிறார்கள் என்று அர்த்தம். ஆனால், நாட்டில் உள்ள மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்காத நிலையில், நாடு எப்படி வளர்ச்சி அடைய முடியும் என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.