வேகக் கட்டுப்பாட்டை இழந்த வான் 5 வாகனங்களுடன் மோதி விபத்து! – ஒருவர் மரணம்; நால்வர் படுகாயம்.

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் எம்பிலிப்பிட்டிய – கல்வங்குவ பிரதேசத்தில் இன்று (03) இடம்பெற்றுள்ளது.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த வான் ஒன்று, 5 வாகனங்களை மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த வான், மற்றுமொரு வான், மூன்று ஓட்டோக்கள், ஒரு மோட்டார் சைக்கிள் என்பவற்றுடன் மோதியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குக் காரணமான வானில் பயணித்த 73 வயதான வயோதிபரே உயிரிழந்துள்ளார். ஏனைய வாகனங்களில் பயணித்த நால்வர் படுகாயமடைந்துள்ளார்.
இந்தநிலையில், விபத்துக்குக் காரணமான வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தின்போது அவர் மதுபோதையில் இருந்தமை பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.