ஜனாதிபதி ரணிலைக் கொல்ல FBயில் துப்பாக்கி கேட்ட ‘சூங் பாண்’ பொடிப் பிள்ளை கைது
அநுராதபுரத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 19 வயது இளைஞன் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எப்பாவல, மடியாவ பிரதேசத்தை சேர்ந்த சுன் பான் விற்பனையாளராக செயற்படும் நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டு விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு இன்று பிற்பகல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 7ஆம் திகதி எப்பாவல தேசிய பாடசாலையில் இடம்பெறும் வைபவத்தில் பங்கேற்கவுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இந்த இளைஞன் கடந்த 03ம் திகதி தனது முகநூல் பக்கத்தில், “ செப்டெம்பர் 7ஆம் திகதி பெறக் கூடியதாக யாரிடமாவது சினைப்பர் துப்பாக்கி ஒன்று உள்ளதா? எப்பாவெலைக்கு நாட்டையே தின்ற மிகப் பெரிய கேவலமான திருடன் வருகிறான், அவனை சுடுவதற்கு” என பதிவிட்டிருந்தார்.
இந்த குறிப்பு குறித்து புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததும், அவரை எப்பாவல போலீசார் விசாரணைக்கு அழைத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, அவருக்கு ஜனாதிபதியை கொல்லும் திட்டமோ தேவையோ இருக்வில்லை என தெரிவித்துள்ளார்.
குறித்த இளைஞன் தற்போது தனது முகநூல் கணக்கிலிருந்து குறித்த குறிப்பை நீக்கியுள்ளார்.
குறித்த இளைஞரின் தந்தை வாடகை வாகன சாரதியாக பணிபுரிவதாகவும் அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டோர் அல்ல எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞருக்கு சினைப்பர் துப்பாக்கி பற்றி எப்படித் தெரியும் என பொலிஸ் புலனாய்வாளர்கள் வினவியதுடன், அவர் கணினி மற்றும் மொபைல் கேம்களான PUBG போன்றவற்றை விளையாடுவதாகவும், தூரத்தில் இருந்து மக்களைக் கொல்ல சினைப்பர் துப்பாக்கி பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
அதிகம் யோசிக்காமல் இந்த ஃபேஸ்புக் பதிவை பதிவிட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
குறித்த இளைஞன் கணினி மற்றும் கைத்தொலைபேசி விளையாட்டுகளுக்கு அடிமையானவர் என விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த இளைஞன் கணினி விளையாட்டுகளுக்கு அடிமையாகிவிட்டதாக பொலிஸாரிடம் தெரிவித்த அவர், அதிகம் யோசிக்காமல் இந்தக் குறிப்பைப் பதிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.