கொழும்பு விபத்தில் 15 வயது தமிழ்ச் சிறுவன் சாவு!

வாகன விபத்தில் 15 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கொழும்பு, மகரகம பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் பாரவூர்தி ஒன்று மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் இருந்து பயணித்த சிலம்பரசன் வாகீசன் (வயது 15) என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 27 வயது இளைஞர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞர், உயிரிழந்த சிறுவனின் உறவினர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்துக்குக் காரணமான பாரவூர்தியின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.