அதிகாலையில் ஆம்னி வேனில் சென்ற குடும்பம்.. நின்ற லொறியில் மோதி 6 பேர் பரிதாப மரணம்
தமிழக மாவட்டம் சேலம், சங்ககிரி அருகே நின்று கொண்டிருந்த லொறி மீது ஆம்னி வேன் மோதி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜதுரை. பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவர்கள் இவர்களுக்கும் 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சஞ்சனா என்ற ஒரு வயது மகள் உள்ளார்.
இதில், கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், நேற்று பிரியாவின் பெற்றோர் கொண்டாலம்பட்டி சென்று இருவருக்கும் இடையே சமரசம் செய்தனர்.
ஆனால், உடன்பாடு ஏற்படாததால் குடும்பத்துடன் இன்று அதிகாலை மகளை அழைத்துச் செல்வதாக கூறி கொண்டலாம்பட்டியில் இருந்து பெருந்துறைக்கு ஆம்னி வேனில் சென்றனர். இந்த ஆம்னி வேனில் 8 பேர் சென்றனர்.
இந்நிலையில், சங்ககிரி அருகே சின்னா கவுண்டனூர் என்ற பகுதியில் சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லொறி மீது ஆம்னி வேன் மோதியது.
இதில், ஆம்னியில் பயணித்த குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஓட்டுநர் விக்னேஷ் மற்றும் பிரியா பலத்த காயமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலிருந்த பொலிசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.